மீன்களில் ரசாயனம் கலப்பதை தடுப்பது குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை..!

159

மீன்களில் பார்மலின் ரசாயனம் கலப்பதை தடுப்பது குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீன்களை பதப்படுத்த பார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலுள்ள மீன் சந்தைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், மீன்களில் பார்மலின் ரசாயனம் கலப்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து பார்மலின் கலந்த மீன்கள் வருவதை தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.