தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

285

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார், 2016 ஆம் ஆண்டின் முடிவில் தமிழகத்தில் உள்ள 15 முக்கிய அணைகளில் 25.74 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறட்சியால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசால் அனுப்பப்படும் ஆய்வுக்குழு தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஆராய உத்தரவிட வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.