துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

320

துணைவேந்தர் நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கத்தை துவக்கி வைத்து பேசிய அவர், படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்கள் எளிதாக வேலைவாய்ப்பை பெற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என கூறினார். துணை வேந்தர்கள் நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும் என குறிப்பிட்ட அவர், நியமனத்தில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

துணை வேந்தர்களுக்கு எவ்வளவு அலுவலக பணி இருந்தாலும் மாணவர்களின் குறைகள் கேட்க நேரம் ஒதுக்க வேண்டும் என ஆளுநர் வேண்டுகோள்விடுத்தார். சமூக முன்னேற்றத்தை அடைய, மாணவர்களுக்கு ஒளி விளக்காக, துணைவேந்தர்களும், பேராசிரியர்களும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.