தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

317

தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூரில் தமிழக காவிரி விவசாய சங்கத்தினரின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் காவிரி டெல்டா பகுதியின் குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்தார். அத்துடன் காவிரி நீர் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் அவர் கூறினார். இதைத்தொடரந்து தமிழகத்தில் முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து விவாதிக்க, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் சங்கத்தினர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றவுள்ளதாகவும், இதையடுத்து அனைவரும் பங்கேற்கும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்