தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சி மேயர் பதவிகளில், 6 மாநகராட்சி மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

266

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சி மேயர் பதவிகளில், 6 மாநகராட்சி மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை சாதி மற்றும் பாலின அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக் கீடு அமல்படுத்தப்படுவதையடுத்து, தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சி மேயர் பதவியிடங்களில் 6 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, வேலூர் மாநகராட்சி மேயர் பதவி எஸ்.சி. பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, எஸ்.சி. பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள், பெண்கள் பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாநகராட்சிகள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 92 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.