தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

368

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.57 சதவீத காரணியுடன் கூடிய ஊதிய உயர்வை 27 மாத நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என்று மின் வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தநிலையில், மின்வாரிய ஊழியர்களுக்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு ஒப்பந்தத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, சிஐடியூ தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் 22-ஆம் தேதி கையெழுத்தாகவுள்ளது.