திமுக எம்பி, எம்எல்ஏ வரும் வரை காத்திருந்த முதலமைச்சர்..!

980

சேலத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினரும் வரும் வரை காத்திருந்த முதலமைச்சர் பழனிசாமி, அவர்கள் வந்த பிறகு மேம்பாலத்தைத் திறந்து வைத்துள்ளார்.

சேலம் ஐந்து சாலைப் பகுதியில் நாட்டிலேயே நீளமான ஈரடுக்கு மேம்பாலத்தைத் தமிழக முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்த விழாவில் திமுகவைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் வருமுன்னே முதலமைச்சர் பழனிசாமி மேடைக்கு வந்துவிட்டார். இருப்பினும் திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இருவரும் வந்தபின்னர் அவர்களையும் அருகில் நிற்க வைத்தே மேம்பாலத்தைத் திறந்து வைத்தது குறிப்பிடத் தக்கது. இந்த அரசியல் நாகரிகத்தைப் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.