தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு..!

93

பரபரப்பான அரசியல் சூழ் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , டெல்லியில் இருந்து திரும்பியுள்ள ஆளுநரை சந்தித்து பேசினார்.

அண்மையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்று , உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் சென்னை திரும்பி உள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பி உள்ள நிலையில், அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜ்பவனில் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பின் போது,தமிழக புதிய தலைமை செயலாளர், டிஜிபி நியமனம் மற்றும் தமிழர்கள் 7 பேர் விடுதலை மற்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து பேசியதாக ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின் றன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ள நிலையில் , முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. இதனிடையே ஆளுநர் அழைப்பின் பேரிலேயே முதலமைச்சர் ராஜ்பவன் சென்று சந்தித்ததாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.