பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று விலை உயர்வு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

143

பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், பால் விலை உயர்த்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவில்லை என்றும், பலரின் கோரிக்கையை ஏற்று தான் பால் விலை உயர்த்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அடுத்த 7 நாட்களில் விவசாய தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.