முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

229

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. இந்தநிலையில், இன்று காலை போயஸ் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற ஓ. பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்பிறகு, தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் அறைகளுக்கு சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன்பிறகு, நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.