கேரள போலீசாரை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் முழு வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

329

கேரள போலீசாரை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் முழு வேலைநிறுத்தம் காரணமாக தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
புதிய மருத்துவ கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில் முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் தமிழக – கேரள எல்லையான களியக்காவிளை பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. காவிரி பிரச்சனி காரணமாக கர்நாடக செல்லும் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக தற்போது கேரளா செல்லும் தமிழக பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.