தமிழக சட்டப்பேரவையில் இன்று 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்..!

115

தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையம் மற்றும் இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

சட்டசபையில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று வேலாண்மைத் துறை மீதான விவாதம் நடைபெற்றது. இது தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் துரைக்கண்ணு பதிலளித்து பேசினார். இதனிடையே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக நீர் தேக்கங்களில் நீர் ஆவியாவதை தடுக்க ஆயிரத்து 125 கோடி ரூபாய் செலவில் மிதக்கும் சூரியசக்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். சென்னையில் 6 இடங்களில் 932 கோடி ரூபாய் செலவில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்த அவர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் 11 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பாண்டியராஜன், சேவூர் ராமசந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் பதிலளிக்க உள்ளனர். இதில், கோயில் சிலை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.