வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் | ஒரு நாள் ஊதியத்தை வழங்க அரசு ஊழியர்கள் முடிவு !

92

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் கணேசன், செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், பயிர்கள் கருகியதை கண்டு மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை அவர் குறிப்பிட்டார். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உதவும் விதமாக தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.