அரசுப் பள்ளிகளில் ஆர்.ஓ. வாட்டர் – அரசாணை வெளியீடு

392

49 கோடி ரூபாய் செலவில், 2,448 அரசுப்பள்ளிகளில் ஆர்.ஓ முறையில் சுத்திகரித்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டசபையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து, தற்போது, 2,448 அரசுப் பள்ளிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருக்கும் நீரை, சுத்திகரித்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும்,

49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு 2 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.