தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, கூவத்தூரில் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

342

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து, கூவத்தூரில் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, நாளை சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கூவத்தூர் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏ-க்களுடன் அவர் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி காண வியூகம் அமைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், எம்எல்ஏ-க்கள் தனக்கு அளித்து வரும் ஆதரவை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மேலும் ஒருமுறை உறுதிசெய்து கொள்வார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.