தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது..!

658

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 567 பள்ளிகளிலிருந்து 211 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 756 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில் 6 ஆயிரத்து 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வேலூர், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய சிறைகளிலுள்ள 186 கைதிகளும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.