தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மொத்த வணிகத்தில் சுமார் 54 ஆயிரம் கோடி ரூபாயை அடைந்து சாதனை படைத்துள்ளதாக அந்த வங்கியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

256

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மொத்த வணிகத்தில் சுமார் 54 ஆயிரம் கோடி ரூபாயை அடைந்து சாதனை படைத்துள்ளதாக அந்த வங்கியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் 36 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த வங்கியின் தலைவர் அண்ணாமலை, 2016-17ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 2 புள்ளி 30 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார். இதன் மூலம் வங்கி மொத்த வணிகத்தில் சுமார் 54 ஆயிரத்து 162 கோடி ரூபாயை எட்டி உள்ளதாக அவர் தெரிவித்தார்.