தூத்துக்குடியில் வீட்டிற்கு மின் இணைப்பு தர லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

327

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவர், தனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வழங்க கோரி தூத்துக்குடி வடக்கு மண்டல செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதற்கு மின் வாரிய போர்மேன் கிருபாகரன், புதிதாக மின் இணைப்பு அளிக்க 2 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் ஜேக்கப் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரையின் பேரில் ஜேக்கப், போர்மேன் கிருபாகரனிடம் ரசாயன பொடி தடவிய பணத்தினை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.