டெல்டா மாவட்ட கிராமங்கள் தண்ணீர் இல்லாமல் தவிப்பு..!

369

தூர் வாருவதற்கு ஆண்டுதோறும் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டும், முறையாக பயன்படுத்தவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டும், டெல்டா மாவட்ட கிராமங்களில் இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை என்றார். மன்னார்குடியில் ஆற்றின் ஓரமாகவே 90-க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தும், தண்ணீர் நிரம்பவில்லை என முத்தரசன் குறிப்பிட்டார்.

தூர் வாருவதற்கு ஆண்டுதோறும் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டும், முறையாக பயன்படுத்தவில்லை என்றும், தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகம் மிக மோசமாக உள்ளதாக அவர் குற்றச்சாட்டினார். விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து குளங்களில் தூர் வாரிய நிலையில், அரசு செலவிட்டு தூர் வாரியதாக கணக்கு காட்டப்படுவதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.