திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

92

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கும், சித்தமல்லி பகுதியை சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஏற்பட்ட தகராறில் கடந்த 2015ம் ஆண்டு வெங்கடேஷை, விஜய் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் கொலை வழக்கில் தொடர்புடைய விஜய் மற்றும் அவரது நண்பர் மருதுபாண்டி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.