திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி..!

161

திருவாரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், விளமல், காட்டூர், திருக்கண்ணமங்கை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவெளிக்கு பிறகு பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சில இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.

இதே போன்று, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நான்கு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. திருமயம், பொண்ணமராவதி, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.