திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பணம் திருடப்பட்டது தொடர்பாக சிசிடிவியில் பதிவான உருவம் வைத்து காவல்துறையினர் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

337

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற பணம் திருடப்பட்டது தொடர்பாக சிசிடிவியில் பதிவான உருவம் வைத்து காவல்துறையினர் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் வீடு கட்ட தேவையான பொருட்கள் வாங்க வங்கி ஒன்றில் இருந்து 2 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றுள்ளார். துணிக்கடையில் துணி எடுத்து வருவதற்குள் அவரது இருசக்கர வாகனத்தின் டேங்கர் கவரில் வைத்திருந்த பணம் திருடப்பட்டுள்ளது.இந்த நிலையில் துணிக்கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பணம் திருடப்பட்ட நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கேமராவில் பதிவான உருவம் வைத்து திருவாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.