திருவண்ணாமலையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

199

கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மாலை முதல் தொடங்கிய மழை இரவு வரை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காட்சியளித்தது. பள்ளி செல்லும் மாணவர்களும் குடைகளை பிடித்தபடி பள்ளிகளுக்கு சென்றனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவாக தண்டராம்பட்டு பகுதியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.