திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஆயிரத்து 750 பேர் தேர்வாகியுள்ளனர்.

293

திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஆயிரத்து 750 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 14 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராணுவ அதிகாரி பிட்ரே, முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் 23 மற்றும் நவம்பர் 27 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
போலி ஆவணங்கள் கொடுத்து முகாமில் கலந்து கொள்வதற்கு உதவிய இடைத்தரகர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.