பாஜக அலுவலகம் மீது தாக்குதல்| திருவனந்தபுரத்தில் முழு கடையடைப்பு போராட்டம்

298

பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரத்தில் பாஜகவினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயனிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.