திருப்பூரில் கடத்தப்பட்ட ஆறு வயது சிறுவன். காவல்துறையினர் பத்திரமாக மீட்பு.

249

திருப்பூர் அவிநாசியில் கடத்தப்பட்ட மருத்துவரின் 6 வயது மகன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ளது தீபா மருத்துவமனை. மருத்துவ தம்பதிகளான செந்தில்-சங்கீதா இந்த மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆர்யநரசிம்மன் மற்றும் தீபா ஆகிய குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பள்ளிக்கூடத்திற்கு சென்ற மகன் ஆர்ய நரசிம்மனை, மருத்துவமனையில் வேலை செய்த முன்னாள் ஊழியர் தேவராஜ் என்பவர் கடத்தி சென்றார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவியில் பதிவான உருவத்தை வைத்து அனைத்து சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற தேவராஜை, தாராபுரம்-பழனிச்சாலை சோதனைச்சாவடி போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர், அவனுடன் இருந்த சிறுவன் ஆர்யநரசிம்மனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்காக சிறுவன் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கடத்தப்பட்டானா என்பது குறித்து தேவராஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.