திருப்பூரில் கத்தியால் குத்தி வடமாநில இளைஞர் படுகொலை…

160

திருப்பூரில் கிரிக்கெட் விளையாட்டில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, வடமாநில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வஞ்சிபாளையம் சாலை அருகே உள்ள குடியிருப்பில் தங்கியுள்ள வடமாநில இளைஞர்கள், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால், வடமாநில இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அப்போது, அவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரோனி என்ற வடமாநில இளைஞர் சாலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கத்திரிக்கோலால் ரோனி குத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ரோனியுடன் தங்கியிருந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.