திருப்பூரில் கார் கடத்தல் தொடர்பான வழக்கில் 2 போலீசார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 தலைமை காவலர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

193

திருப்பூரில் கார் கடத்தல் தொடர்பான வழக்கில் 2 போலீசார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 தலைமை காவலர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில், கடந்த ஜுன் மாதம் கேரளாவிலிருந்து மருந்துகளை ஏற்றி வந்த காரை, போலீஸ் உடையணிந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர். இதனையடுத்து காரில் வந்தவர்களை தாக்கிவிட்டு, காரை கடத்தி சென்றுவிட்டனர். இதுதொடர்பான வழக்கில், காவலர்கள் பழனிவேல், அர்ஜுனன் ஆகியோரை போலீசார் கைது செய்து அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
மேலும் கார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய, காவல் ஆய்வாளர் முத்துக்குமார், தலைமை காவலர் தர்மேந்திரன், சுதிர்குமார், சுபாஷ் ஆகிய 4 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 3 புள்ளி 95 கோடி ரூபாய் ஹவாலா பணம் கொண்டு வந்த காரை வழிமறித்து கொள்ளையடித்த வழக்கில் இவர்களுக்கும் தொடர்புள்ளது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.