temple

திருமலை ஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக 9 டன் மலர்கள் திருமலையை வந்தடைந்தன.

ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஏழுமலையான் ஆலயத்தில் புஷ்ப யாகம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான யாகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருமாளின் அவதார நட்சத்திரமான திருவோண நாளன்று நடைபெற்ற புஷ்ப யாகத்திற்காக தமிழ்நாட்டிலிருந்து 5 டன், கர்நாடகாவிலிருந்து 2 டன், தெலுங்கானாவிலிருந்து 2 டன் என மொத்தம் 9 டன் பூக்கள் திருமலைக்கு வந்து சேர்ந்தன. இதனை சூடிக்கொண்ட ஏழுமலையான், ஸ்ரீதேவி பூதேவிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதனிடையே, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரியின் மகனும், பிரபல தமிழக நடிகருமான ஜீவா திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, தி கொரில்லா, ஜிப்ஸி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளதாலும், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், படங்கள் வெற்றியடைய ஏழுமலையான பிரார்த்தனை செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.