திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவில், மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

307

திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவில், மலையப்ப சுவாமி, கருட வாகனத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்படி பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய சேவையான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.