திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

381

திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த சிரஞ்சீவி ரெட்டி காய்ச்சல் காரணமாக திருமலை தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிரஞ்சீவியின் இரத்த நாளங்கள் செயல் இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து . சிரஞ்சீவியின் தாயார் அவரது உடலை தானம் செய்ய முன்வந்தார். இதன்படி அவரது இதயம் அறுவை சிகிக்சை செய்யப்பட்டு தனி விமானம் மூலம் உடனடியாக திருப்பதி ஸ்விம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகம் ஸ்விம்ஸ் மருத்துவமனைக்கும், இரண்டாவது சிறுநீரகம் நெல்லூருக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த சிரஞ்சீவி ரெட்டி திருப்பதி தேவஸ்தானத்தில் கான்ட்டிராக்ட் பணியில் வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.