திருப்பதி பெருமாள் ஆலயத்தில் இன்று தேவஸ்தானம் சார்பில் ஆனிவார ஆஸ்தானம் என்ற உற்சவம் நடைபெற்றது.

380

திருப்பதி பெருமாள் ஆலயத்தில் இன்று தேவஸ்தானம் சார்பில் ஆனிவார ஆஸ்தானம் என்ற உற்சவம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஆடிமாதப்பிறப்பை முன்னிட்டு, ஆனி வார ஆஸ்தானம் என்ற உற்சவத்தின்போது, ஆலயத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்தபின்னர், இன்றிலிருந்து ஆண்டு கணக்குகளை துவக்க நாளாக கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வரவு செலவு கணக்குகள் பெருமாளின் முன் சமர்ப்பிக்கப்பட்டு, புதிய கணக்குகள் துவக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்கல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலய ஜீயர் சுவாமிகள் கலந்துக்கொண்டனர். இதனிடையே, வார இறுதி நாள் என்பதால், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிறைந்துள்ளது. ஆஸ்தான நிகழ்வு என்பதால், ஆனிவார ஆஸ்தானத்திற்காக, ஆலயத்தின் ஆர்ஜித சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மாலையில் பெருமாள், தாயார் பல்லக்குகளில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருவார்கள் என ஆலய துணை செயல் அலுவலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.