தொடர் விடுமுறை காரணமாக வரும் 23-ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் ரத்து..!

579

தொடர் விடுமுறை காரணமாக வரும் 23-ஆம் தேதி முதல் திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் ஜனவரி மாதம் முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 23 ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறையின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி கோவிலின் பிரசாதமான லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.