திருப்பதி ஏழுமலையானுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க கிரீடம் மற்றும் வெள்ளிப் பாதங்களை தமிழக பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த துரைசாமி யாதவ் என்ற பக்தர், தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருமலையில் உள்ள அறங்காவலர் குழு தலைவரை சந்தித்து அவர் பேசினார். அப்போது ஏழுமலையானுக்கு காணிக்கையாக 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட 28 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க கிரீடத்தையும், 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெள்ளி திருப்பாதங்களையும் துரைசாமி யாதவ் வழங்கினார்.