திருப்பதி திருமலையில் பல்லி விழுந்த உணவை பரிமாறிய தனியார் உணவகத்துக்கு தேவஸ்தான அதிகாரிகள் சீல் …!

776

திருப்பதி திருமலையில் பல்லி விழுந்த உணவை பரிமாறிய தனியார் உணவகத்துக்கு தேவஸ்தான அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
திருப்பதி திருமலையில் சுவாமி தரிசனம் செய்த அதிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அங்கிருந்த தனியார் உணவகத்தில் சாப்பிட்டபோது, சாம்பாரில் பல்லி விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தைகளும் சாம்பாரை உண்டதால், பதற்றமடைந்த அவர்கள், இதுதொடர்பாக, திருமலை தேவஸ்தானத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த தேவஸ்தான கண்காணிப்புக்குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பல்லி விழுந்த உணவை பரிமாறிய தனியார் உணவகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.