ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா : 7-ஆம் நாளான இன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா

450

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற தங்க சூரிய பிரபை வாகன சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான இன்று மலையப்ப சுவாமி தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.கோலாட்டம், பரத நாட்டியத்துடன் சூரிய பிரபை வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி வழிப்பட்டனர்.