ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்..!

349

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பிரபலங்கள் பலர் சாமி தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். இதேபோல் திரைப்பட நடிகை ஸ்ரேயா இன்று ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்ரேயாவுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். இதனிடையே சமீபத்தில் திருமணமான ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகில ப்ரியா தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய அவர், ஏழுமலையானை தரிசனம் செய்து பரிபூரண அருளினை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.