திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அமைப்பு தெரிவித்துள்ளது.

387

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அமைப்பு தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவிலில் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்ட வசதிகளை பெறுவதற்கு, ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையை, திருப்பதி தேவஸ்தானம் இதுவரை பெற்றுவந்தது, இந்நிலையில் வங்கி கணக்கு, பான் கார்டுகள் போன்றவற்றிற்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதால்,
தற்போது திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதாரை கட்டாயம் ஆக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் வி.ஐ.பி தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதாரை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.