திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பாக, கன்னியாகுமரியில் மிக பிரமாண்டமாக பெருமாள் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

771

திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பாக, கன்னியாகுமரியில் மிக பிரமாண்டமாக பெருமாள் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்தியாவின் தென்கோடி பகுதியான குமரி கடற்கரையில், 5 ஏக்கர் பரப்பளவில் திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் மிகப்பெரிய கோவில் கட்டப்பட்டு வருகிறது. 11கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிகள், மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த கோவிலில் மூலவரான வெங்கடாசலபதிக்கும், பத்மாவதி தாயாருக்கும் சந்நிதிகள் எழுப்பப்படுகின்றன. அத்துடன், கோசாலை மற்றும் அன்னதான மண்டபமும் அமைக்கப்படுகிறது. சிறப்பு அம்சமாக, ஏப்ரல் மாதம் 18 மற்றும் 19ஆம் தேதிகளில், மூலவர் வெங்கடாசலபதியின் பாதங்களில் சூரிய ஒளிப்படும் விதமாக மேற்கூரை கட்டிடகலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.