திருப்பதி கோயிலில் பக்தர்களின் பாதுகாப்புக்காக 1400 சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு..!

380

திருப்பதி கோயிலில் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஆயிரத்து 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கோயில் வளாகத்திற்குள் குற்றச்செயல்களை தடுக்கவும், இடைத்தரகர்களை கட்டுப்படுத்தவும் கோயில் நிர்வாகம் பல்வேறு நடடிவக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 2 ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் முதல் கட்டமாக அலிபிரி சோதனை சாவடி முதல் திருமலை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக, கோயில் நிர்வாகம் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.