ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

66

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் காரணம் என அவதூறு குற்றச்சாட்டுக்களை கூறிவருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டுவரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
இதனை, பா.ஜ.க. முழு சணிக்காயை சோற்றில் மறைப்பது போல மூடி மறைத்து பேசி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என விரும்பினால் அதற்குரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும் என கூறியுள்ள அவர்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக மக்களை மத்திய பா.ஜ.க. அரசு ஏமாற்றியதைப் போல, இந்த ஆண்டும் ஏமாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த ஒருசில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.