காற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..!

148

திருப்பதி – திருமலையில் காற்று மாசுபடுவதை தடுக்க, மலைப்பாதையில் பேட்டரி கார்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல லட்சம் பேர் வந்து செல்லும் நிலையில், அதிக வாகனங்கள் இயக்கப்படுவதால், காற்றுமாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பதி மாநகராட்சி சார்பில் 3 பேட்டரி வாகனங்கள் திருமலைக்கு மலைப்பாதையில் சோதனை முயற்சியாக இயக்கப்பட்டன. இந்த சோதனை ஓட்டத்தில், நிர்ணயிக்க நேரத்தை விட 5 நிமிடம் முன்னதாக பேட்டரி கார்கள் திருமலைக்கு சென்றதோடு, எந்தவித சிரமமும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் கிரிஷா, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான 15 பேட்டரி கார்களை வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். மேலும், டாக்சி உரிமையாளர்கள் பேட்டரி கார்களை வாங்க முன்வந்தால், மானியத்துடன் கடன் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.