திருக்குறளை இந்தியர் அனைவரும் கற்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. கூறியுள்ளார்.

234

வருகிற 29-ம் தேதி கங்கை நதிக்கரையில் திருவள்ளுவர் சிலைகளை, பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய் தலைமையில் நிறுவப்பட உள்ளதால், அதற்கான திருவள்ளுவர் சிலைகளை கங்கை நதிக் கரைக்கு கொண்டு செல்லும் வழியில், பல்வேறு இடங்களில் திருவள்ளுவரின் புகழையும், திருக்குறளின் அருமையையும் தெரிவிக்கும் வகையில், ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் வந்த அவர், மாணவர்களிடமும், பொது மக்களிடமும் திருக்குறள் பற்றி பேசினார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருக்குறள் உலக பொதுமறை மட்டுமல்லாமல் திருக்குறளை இந்தியர் அனைவரும் கற்க வேண்டும் என கூறினார்.