கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் – திருச்சி சிவா

341

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி காலாமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் உறுப்பினர்களும் மாநிலங்களவையில் ஆதரவு தெரிவித்தனர்.