ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி திருச்சி அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

104

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் அண்ணாசிலை அருகே ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனையடுத்து, அவரை தடுத்தி நிறுத்திய போலீசார் தீக்குளிக்க முயன்றவரை பத்திரமாக மீட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தீக்களிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.