திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது.

268

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினசரி அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி, ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9-ஆம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.