திருச்செந்தூரில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

249

திருச்செந்தூரில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலையோரங்களில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் சிரமம் அடைந்தனர். அதேபோல் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.