திருச்செந்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

255

திருச்செந்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டினத்தை
சேர்ந்தவர் ரவி. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரது மகன் அழகுதுரை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் விடுதலையானார். இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே உள்ள மங்கம்மாள் சாலை பட்டு பகுதியில் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், திருச்செந்தூர் போலீசார் அழகுதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக அழகுதுரை கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.