திமுக பிரமுகர் காரில் ரூ.40 லட்சம் பறிமுதல்..!

150

திருச்செந்தூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவற்காக 40 லட்சம் ரூபாயை காரில் பதுக்கிவைத்திருந்த திமுக பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி மத்திமான்விளையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் வசீகரன் வந்த காரை போலீசார் மறித்து விசாரித்தனர். இதனையடுத்து காரில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த 40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த வசீகரன் மற்றும் அவரது மகன் அஜீத்திடம் விசாரணை நடத்தினர். இதில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக 40 லட்சம் ரூபாய் பணம் எடுத்துச்செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பணப்பட்டுவாடா தொடர்பாக வசீகரன் மற்றும் அஜீத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், காரையும் பறிமுதல் செய்தனர்.