பணமில்லா பரிவர்த்தனையில் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் முறை : ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.

258

ஸ்வைப்பிங் இயந்திரங்கள் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் முறையினை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் 10 ஆயிரம் ஸ்வைப் இயந்திரங்கள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்டேட் வங்கி டெபிட் கார்டு மூலம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், டெபிட் கார்டுகள் இல்லாமல் ரயில்வே முன்பதிவு மையங்களை அணுகி டிக்கெட்டை ரத்து செய்துகொள்ளலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பிற வங்கி வாடிக்கையாளர்கள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய டெபிட் கார்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அதன் மூலம், முன்பதிவு செய்த தொகை அவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.